Wednesday 8th of May 2024 12:57:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஒலிம்பிக் பதக்க வேட்டையில்  அமெரிக்கா - சீனா தொடர் ஆதிக்கம்!

ஒலிம்பிக் பதக்க வேட்டையில் அமெரிக்கா - சீனா தொடர் ஆதிக்கம்!


ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து அமெரிக்கா, சீனா நாடுகள் முன்னணியில் உள்ளன.

அமெரிக்கா இதுவரை 22 தங்கம், 25 வெள்ளி, 17 வெண்கலம் உட்பட 64 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சீனா அதிக தங்கங்களை வென்றுள்ளது. அதேநேரம் ஒட்டுமொத்த பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா 29 தங்கம் 17 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்கள் என 62 பதக்கங்களை வென்றுள்ளது.

ROC என்ற பெயரில் போட்டியில் பங்கேற்றுள்ள ரஷ்ய வீரர்கள் 12 தங்கம், 21 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்கள் என 50 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

ரஷ்யா வீரர்களின் பாரிய முறைகேடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 4 வருடங்கள் சா்வதேச போட்டிகளில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய நாட்டு வீரர்கள் அந்நாட்டு கொடி இல்லாமல் ROC (Russian Olympic Committee) என்ற பெயரில் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, இம்முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் ஜப்பான் 17 தங்கம், 6 வெள்ளி, 10 வெண்கலம் என 33 பதக்கங்களை வென்றுள்ளது.

14 தங்கம், 4 வெள்ளி, 15 வெண்கலங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது.

பிரித்தானியா 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 12 வெண்கலங்களுடன் 35 பதங்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

பதக்கப் பட்டியலில் முன்னணியில் உள்ள ஏனைய நாடுகள் வருமாறு,

பிரான்ஸ் - 06 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம்,

ஜோ்மனி - 06 தங்கம், 06 வெள்ளி, 11 வெண்கலம்,

கொரிய குடியரசு - 06 தங்கம், 04 வெள்ளி, 09 வெண்கலம்,

தெதர்லாந்து - 05தங்கம், 07 வெள்ளி, 06 வெண்கலம்,

இத்தாலி - 04 தங்கம், 09 வெள்ளி, 15 வெண்கலம்,

நியூசிலாந்து 04 தங்கம், 03 வெள்ளி, 11 வெண்கலம்,

கிறீஸ் - 04 தங்கம், 03 வெள்ளி, 01 வெண்கலம்,

கனடா - 03 தங்கம், 04 வெள்ளி, 07 வெண்கலம்,

சுவிட்சர்லாந்து 03 தங்கம், 04 வெள்ளி, 05 வெண்கலம்,

குரோசியா - 03 தங்கம், 02வெள்ளி, 02 வெண்கலம்


Category: விளையாட்டு, புதிது
Tags: சீனா, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE